‘‘வாழ்த்துக்கள் தனுஷ்!’’ - ரஜினி, ‘‘நன்றி தலைவா!’’ - தனுஷ்

‘‘வாழ்த்துக்கள் தனுஷ்!’’ - ரஜினி, ‘‘நன்றி தலைவா!’’ - தனுஷ்

செய்திகள் 4-Feb-2016 12:54 PM IST Chandru கருத்துக்கள்

ட்விட்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினியை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இத்தனை லட்சம் ஃபாலோயர்களை வைத்திருந்தாலும், ரஜினிடமிருந்து ட்வீட் வருவது அரிதாகவே நடக்கும். அதிலும் சினிமா குறித்த செய்திகள் அரிதிலும் அரிது. அந்த அரிதான சம்பவம் இன்று நடந்துள்ளது. தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்திருக்கும் ‘விசாரணை’ படத்தைப் பார்த்துவிட்டு, அதுகுறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ரஜினி. அதில்... ‘‘விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலகப்பட வரிசையில் ஒரு தமிழ் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சூப்பர்ஸ்டாரின் வாழ்த்தில் சந்தோஷத்தின் உச்சிக்குச் சென்ற தனுஷ், பதிலுக்கு ‘நன்றி தலைவா’ என்று பதில் ட்வீட் அடித்திருக்கிறார். வெற்றமாறன் இயக்கத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘விசாரணை’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;