‘சேதுபதி’க்கு பச்சைக்கொடி... ரிலீஸ் பிளானில் விஜய்சேதுபதி!

‘சேதுபதி’க்கு பச்சைக்கொடி... ரிலீஸ் பிளானில் விஜய்சேதுபதி!

செய்திகள் 4-Feb-2016 12:39 PM IST Chandru கருத்துக்கள்

விஜய்சேதுபதியின் அரை டஜன் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. அதில் முதல் படமாக நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் ‘காதலும் கடந்துபோகும்’ வரும் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’ அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேபதி போலீஸாக நடித்திருக்கும் ‘சேதுபதி’ படம் சென்சாருக்குச் சென்றிருந்தது. முழுப்படத்தையும் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி, அனைத்துத்தரப்பினரும் படத்தைப் பார்க்கலாம் என பச்சைக்கொடி காட்டிவிட்டார்களாம்.

இதனால் ‘சேதுபதி’ படத்தை வரும் 19ஆம் தேதி வெளியிடலாமா என யோசித்து வருகிறதாம் ‘சேதுபதி’ வட்டாரம். ஒருவேளை ‘காதலும் கடந்துபோகும்’ படம் திட்டமிட்டபடி 12ஆம் தேதி வெளியாகும்பட்சத்தில், அடுத்த வாரமே அதே ஹீரோவின் இன்னொரு படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;