ஒளிப்பதிவாளரான விஜய்மில்டன் முதன் முதலாக இயக்கிய படம் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பரத்தை வைத்து விஜய் மில்டன் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். விஜய் மில்டன் சொந்தமாக தயாரித்து இயக்கும் இப்படம் அவர் இயக்கிய இரண்டாவது படமான ‘கோலிசோடா’வை போல் மாறுபட்ட ஒரு கதை களத்தில் பயணிக்கும் கதையாம். இப்படத்தில் பரத்துடன் காமெடி பாத்திரத்தில் இயக்குனரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி, இசை அமைப்பாளர் முதலானோரின் தேர்வு நடந்து வருகிறது. இயக்குனர் விஜய் மில்டனும், பரத்தும் இரண்டாவது முறையாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. பரத் தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....