மீண்டும் ‘மருதநாயகம்’... லைக்காவுக்கு ‘ஓகே’ சொல்வாரா கமல்?

மீண்டும் ‘மருதநாயகம்’... லைக்காவுக்கு ‘ஓகே’ சொல்வாரா கமல்?

செய்திகள் 4-Feb-2016 10:44 AM IST Chandru கருத்துக்கள்

உலகநாயகனின் கனவுப்படமான ‘மருதநாயகம்’ ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்களை எட்டவிருக்கிறது. 20 சதவிகித படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்த நிலையில் அப்படம் பட்ஜெட் காரணமாக அப்போதே கைவிடப்பட்டது. இடையில் கமல் எவ்வளவோ முயற்சித்தும் ‘மருதநாயகம்’ மீண்டும் உருவாகுவதற்கான சூழ்நிலையே அமையவில்லை. இந்நிலையில் ‘கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் ‘மருதநாயகம்’ படத்தை எடுப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாம்.

தற்போது ரஜினி, ஷங்கரின் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துவரும் இந்நிறுவனம் ‘மருதநாயகம்’ படத்திற்கும் பெரிய அளவிலான பட்ஜெட்டை ஒதுக்க தயாராக இருக்கிறதாம். தங்களின் எண்ணத்தையும் உலநாயகனிடம் தெரிவித்துள்ளார்களாம் லைக்கா நிறுவனத்தார். மருதநாயகத்தை மீண்டும் உருவாக்குவது குறித்து கமல் தன் நெருங்கிய வட்டாரங்களிடம் தற்போது ஆலோசித்து வருகிறாராம். எல்லாம் கைகூடி வருமேயானால் லைக்காவுக்கு கமல் ‘ஓகே’ சொல்வார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;