சத்யதேவ் ஐ.பி.எஸ். உடன் கைகோர்க்கும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.!

சத்யதேவ் ஐ.பி.எஸ். உடன் கைகோர்க்கும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.!

செய்திகள் 4-Feb-2016 10:24 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கடந்த வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் அஜித் சத்யதேவ் ஐ.பி.எஸ்.ஸாக நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்யும், அட்லி இயக்கி வரும் ‘தெறி’ படத்தில் விஜயகுமார் எனும் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரெடாக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று இரவு 12.01 மணி அளவில் (அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை) வெளியாகிறது. ஒருபுறம் ‘தல’ ரசிகர்கள் சத்யதேவ் ஐ.பி.எஸ். ஒரு வருடத்தைக் கடந்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் ‘தளபதி’ ரசிகர்கள் விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நாளை ‘தல தளபதி’ ரசிகர்களின் நாள்!

ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் 50வது படமாக உருவாகிவரும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;