சங்கு சக்கரத்தை சுழலவிட்ட இயக்குனர் லிங்குசாமி!

சங்கு சக்கரத்தை சுழலவிட்ட இயக்குனர் லிங்குசாமி!

செய்திகள் 3-Feb-2016 11:51 AM IST Chandru கருத்துக்கள்

சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் வெற்றிபெறுவதோடு நின்றுவிடாமல், அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான வாய்ப்புகளையும், திறமைகளையும் ஏற்படுத்த வேண்டுமென்பார்கள். அப்படி இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த சதீஷ், தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். ‘சினிமாவாலா’ சதீஷ் என்றால் திரையுலகத்தினருக்கு எளிதில் தெரியும். இவர் ஆரம்பித்திருக்கும் புதிய நிறுவனம் ‘சினிமாவாலா பிக்சர்ஸ்’. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கிறது ‘சங்கு சக்கரம்’ திரைப்படம்.

மாரீசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கு சக்கரம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன். இவருடன் ‘பசங்க 2’ படத்தில் நடித்த ‘மாஸ்டர்’ நிஷேஷும் நடிக்கிறார். ரவி கண்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஆர்ட் இயக்கத்தை கவனித்துக் கொள்கிறார் ஜெய்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி இப்படத்தை இனிதே துவக்கி வைக்க, ‘சங்கு சக்கர’த்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;