புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகர் சிலம்பரசன். ஆம்... இன்று அவரின் பிறந்தநாள்! அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட இளையதலைமுறை நடிகர்களில் சிம்பு முக்கியமானவர். படம் வருகிறதோ இல்லையோ, அவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. அவரின் கடின காலங்களில்கூட அவரோடு கைகோர்த்து நின்றுகொண்டிருப்பவர்கள் ரசிகர்கள் மட்டுமே. அதனாலேயே... ‘நீங்க இல்லாம நான் இல்ல’ என ரசிகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்வார் சிம்பு.
உண்மையில் சிம்புவிற்கு கடந்த வருடம் கொஞ்சம் கசப்பானதாகவே அமைந்துவிட்டது. போனது போகட்டும்... இந்த புதிய வருடத்தில் சிம்புவிற்கு அனைத்தும் நல்லதாகவே அமைய வாழ்த்துவோம். பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குறளரசன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று சிம்புவின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்திருக்கிறது. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில், குடும்பத்தாருடன் தனது பிறந்தநாளை உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிம்பு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...