மைக் டைசனையும் கவர்ந்த இறுதிச்சுற்று!

மைக் டைசனையும் கவர்ந்த இறுதிச்சுற்று!

செய்திகள் 2-Feb-2016 4:40 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ஏற்கெனவே குத்துச்சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளன என்றாலும் சமீபத்தில் வெளியான மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, பாராட்டுக்கள் வேறு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை என்று சொல்லலாம்! தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இப்படம் பற்றி தெரிந்துகொண்ட பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏராளமானோரின் பெரும் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இறுதிச்சுற்று’ படத்தை உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் ‘இறுதிச்சுற்று’ படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;