ஆனந்த கண்ணீர் சிந்திய மாதவன், சுதா!

ஆனந்த கண்ணீர் சிந்திய மாதவன், சுதா!

செய்திகள் 2-Feb-2016 3:57 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வெள்ளிக் கிழமையன்று (29-1-16) வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பில் நெகிழ்ந்து போய் இருக்கிறார் மாதவன்! நேற்று சென்னையில் இப்படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது மாதவன் பேசும்போது,

‘‘நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தை துவங்க முடிவு செய்ததிலிருந்தே பல தடங்கல்கள்! சில சம்யங்களில் படத்தை விட்டு விடலாம் என்று கூட தோன்றும்! பிறகு கிரீன் சிக்னல் கிடைத்து மீண்டும் கொஞ்ச தூரம் போகும்! மறுபடியும் தடங்கல் வரும். படப்பிடிப்பு துவங்கிய பிறகு இது போன்று எத்தனையோ போராட்டங்கள், தடங்கல்கள்! அதனால் வெறுத்துபோய் படத்தை தூக்கி போடலாம் என்று முடிவு செய்த நேரத்தில் என் நண்பர் ஒருவர், ‘இந்த பட விஷயத்தில் இதுதான் உன் முடிவு என்றால் அடுத்து ஆரம்பிக்கிற படத்தை இந்த அளவுக்காவது கொண்டு வரமுடியுமா என்று யோசி! அதற்கப்புறம் முடிவு எடு’ என்றார்! இப்படி பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்ந்த இந்த படம் என் 4 வருட கவலைகளையும் ஒரே நாளில் மறக்கடிக்க செய்துள்ளது. ‘இறுச்சுற்று’க்கு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் தந்த ஆதரவு அத்தகையது! இந்த வெற்றிக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! ஒரு காலத்திலும் நான் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன்’’ என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குனர் சுதா கோங்கரா, ‘‘ஹிந்தியில் இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தான் ஹிட் ரிசல்ட்டு கிடைத்தது. ஆனால் தமிழில் முதல் காட்சியிலேயே ஹிட் ரிசல்ட் கிடைத்தது. நல்ல கதையை கொண்ட படங்களை நேசிக்கும் ரசிகர்கள், நல்ல சினிமாவை கொண்டாடும் பத்திரிகையாளர்கள் தந்த வெற்றி இது. இந்த வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்’’ என்றார் சந்தோஷ கண்ணீர் மல்க சுதா கோங்கரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொக்கெற்றி - தி நம்பி effect டீஸர்


;