‘இறுதிச்சுற்று’க்கு குவியும் பாராட்டுக்கள்!

‘இறுதிச்சுற்று’க்கு குவியும் பாராட்டுக்கள்!

செய்திகள் 2-Feb-2016 3:20 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் சுதா கோங்கரா இயக்கி, மாதவன், ரித்திகா சிங் நடித்த படம் ‘இறுதிச்சுற்று’. சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் இப்படம் நிறைய பாராட்டுக்களை குவித்து வருகிறது. ஏற்கெனவே ஏராளமான சினிமா பிரபலங்கள் இப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் கார்த்தியும் ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்த்து மாதவன், ரித்திகா சிங், சுதா கோங்கரா உட்பட படக் குழுவினருக்கு தனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் ரசிகர்களின் பெரும் ஆதரவு இப்படத்திற்கு கிடைத்து வருவதால் முதலில் திரையிடப்பட்ட தியேட்டர்களை விட இப்போது அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ‘இறுதிச்சுற்று’க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;