மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘பிவிபி சினிமா’ தயரித்துள்ள ‘பெங்களூர் நாட்கள்’ படத்தை தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்! தமிழ்நாடு தவிர்த்து கர்நாடகா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் ‘பெங்களூர் நாட்கள்’ அமெரிக்காவில் மட்டும் 35 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம். அதாவது உலகம் முழுக்க ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படம் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்கிறனர்.
‘பொம்மிரிலு’ பாஸ்கர் இயக்கியுள்ள ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரேகா முதலானோர் நடித்துள்ளனர். மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே ‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கும் இசை அமைத்துள்ளார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...