நிவின் பாலிக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஜய்!

நிவின் பாலிக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஜய்!

செய்திகள் 2-Feb-2016 12:54 PM IST VRC கருத்துக்கள்

அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கி, நிவின் பாலி நடித்த ‘பிரேமம்’ மலையாள படம் சென்னையில் 250 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாள சினிமா ரசிகர்கள் தவிர தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து பெரும் சாதனை படைத்துள்ள ‘பிரேம்’ படத்தை பல தமிழ் சினிமா பிரபலங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சமீபத்தில் ‘இளைய தளபதி’ விஜய்யும் ‘பிரேமம்’ படத்தை பார்த்து நிவின் பாலியை தனது அலுவலகத்திற்கு திடீரென்று அழைத்து பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்த சர்ப்ரைஸ் பாராட்டு குறித்து நிவில் பாலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

‘‘தான் பெரிய ஒரு ஸ்டார் என்ற பந்தா சிறிதும் இல்லாதவர் விஜய்! மிகவும் அன்பு பாசம் கொண்ட எளிமையான மனிதர்! என்னிடம், கேரளா மற்றும் மலையாள சினிமா பற்றி நிறைய பேசினார்! விஜய்யை போன்ற பிரபலங்களின் பாராட்டு விலை மதிப்பற்றது. விஜய்யை சந்தித்த அந்த நாள் மறக்க முடியாத நாள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;