‘சினிமா நல்ல ஒரு தொழில்!’ -கமல்ஹாசன்

‘சினிமா நல்ல ஒரு தொழில்!’ -கமல்ஹாசன்

செய்திகள் 2-Feb-2016 12:02 PM IST VRC கருத்துக்கள்

சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் ‘V4’ அமைப்பு சார்பில் சென்ற வருடத்தின் சிறந்த படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கமல்ஹாசனுக்கு ஏவி.எம்.சரவணன் வழங்கினார். நடிகர்கள் அரவிந்தசாமி, அருண் விஜய், இயக்குனர்கள் சுந்தர்.சி., மணிகண்டன், விக்னேஷ் சிவன், பிரம்மா, ராஜேஷ், ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ முரளி ராமசாமி உட்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றுக்கொண்ட பின் கமல்ஹாசன் பேசும்போது, ‘‘பள்ளிக்கு போகாத நான் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற செல்கிறேன். சினிமாவில் நடிக்க எனக்கு ஏவி.எம்.நிறுவனம் ஒரு முக்கியமான பள்ளிக்கூடம். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் 3 வயது சிறுவனாக அறிமுகமானேன். என்னை ஏவி.எம். ஒரு பிள்ளையாகவே பார்த்துக்கொண்டது. சினிமா என்பது மிகவும் நல்ல தொழில்! சிலர் இந்த தொழிலுக்கு தங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்று நினைத்தால் அதை மறுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். சினிமாவில் நேர்மையாக தொழில் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை இந்த தொழிலில் இறக்கி விடுகிறார்கள். தவறு செய்பவர்கள் தான் தங்கள் பிள்ளைகள் சினிமா தொழிலுக்கு வரக்கூடாது என்று நினைப்பார்கள்! நேர்மையாக இருப்பவர்களுக்கு சினிமா நல்ல ஒரு தொழில்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;