ஹீரோவாக களம் இறங்கும் ஸ்டன்ட் மாஸ்டர்!

ஹீரோவாக களம் இறங்கும் ஸ்டன்ட் மாஸ்டர்!

செய்திகள் 2-Feb-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் இயக்குனர்களில் திலீப் சுப்பராயனும் ஒருவர்! ஏராளமான படங்களில் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியுள்ள திலீப் சுப்பராயன் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்திலும் பணியாற்றியுள்ளார். ‘தெறி’யின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் திலீப் சுப்பராயன்! இந்த படத்திற்கு ‘சங்கு சக்கரம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் மாரீசன் இயக்கும் இப்படம் ஸ்பூஃபி த்ரில்லர் ரக படமாக உருவாகவிருக்கிறதாம். இப்படத்தில் திலீப் சுப்பராயனுடன் ‘பசங்க-2’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நிஷேஷும் நடிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு இசை அமைக்கும் விஷால் சந்திரசேச்கர் இசை அமைக்கிறார். ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வருவதோடு திரைப்பட தயாரிப்பிலும் இறங்கி, திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் ‘அஞ்சல’. அனைத்து வேலைகளும் முடிந்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஸ்டன்ட் இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி இப்போது ‘சங்கு சக்கரம்’ படம் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்கவிருக்கிறார் திலீப் சுப்பராயன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;