1.5 கோடி விலைபோன ‘இது நம்ம ஆளு’

1.5 கோடி விலைபோன ‘இது நம்ம ஆளு’

செய்திகள் 2-Feb-2016 10:18 AM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயந்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்கள் சிம்புவின் பிறந்த நாளையொட்டி நாளை (3-2-16) வெளியாகவிருக்கிறது. டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் முதன் முதலாக இசை அமைத்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களின் உரிமையை பிரபல ‘லகரி ஆடியோ’ நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஒரு அறிமுக இசை அமைப்பாளர் இசை அமைக்கும் ஒரு படத்தின் பாடல்கள் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலாக இசை அமைத்த படம் ‘ரோஜா’. இப்படத்தின் பாடல்களின் உரிமையை இந்த லகரி நிறுவனம் தான் வாங்கியிருந்தது. இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்திருப்பதை போல குறளரசனும் பெரும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம். ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;