பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் பாப் கார்ன் எண்டெர்டைன்மெண்ட் வழங்க, தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாராகும் பிரம்மாண்டமான படம் இயக்குகிறார் விஜய். இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். கிரீடம், மதராசபட்டினம், தெய்வ திருமகள், தலைவா, சைவம் உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் விஜய்க்கு இதுவே முதல் ஹிந்தி படமாகும். பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் சோனி சூட் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஷாரூக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது .மற்ற நடிக நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...
இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...
இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்...