‘போக்கிரி ராஜா’வுக்கு ரிலீஸ் தேதி ரெடி!

‘போக்கிரி ராஜா’வுக்கு ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 1-Feb-2016 12:54 PM IST Chandru கருத்துக்கள்

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் புதிய படம் ‘போக்கிரி ராஜா’. ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று மாலை 7 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகவிருக்கிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘போக்கிரி ராஜா’வின் பாடல்களை அடுத்த வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படம் வரும் 26ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘காஸ்மோ வில்லேஜ் ரிலீஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘போக்கிரி ராஜா’ படத்தை ஃபன் ஃபேன்டஸி ஃபிலிம் என அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் க்ளைமேக்ஸில் இதற்கான விடை இருக்கும் என ‘சஸ்பென்ஸ்’ வைத்துள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;