உலகநாயகனை வியக்க வைத்த படம்!

உலகநாயகனை வியக்க வைத்த படம்!

செய்திகள் 30-Jan-2016 10:54 AM IST Chandru கருத்துக்கள்

சூப்பர்ஸ்டாரைத் தொடர்ந்து உலகநாயகனும் தற்போது ட்விட்டரில் களமிறங்கியிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்திலிருக்கின்றனர். இந்த கணக்கு துவக்கப்பட்டு இரண்டொரு நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது 65 ஆயிரம் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். கமல்ஹாசனின் ஒவ்வொரு ட்வீட்டையும் எதிர்பார்த்து, அதனை ஃபேவரைட் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகிறார்கள். இன்று தான் பார்த்து வியந்த படம் குறித்த கமல் ட்வீட் ஒன்று செய்தார்.

‘‘நல்ல சினிமாவின் தாக்கத்தை மணிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன்!’’ என்று அவர் செய்த ட்வீட்டால் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். ‘விசாரணை’ படத்தை இயக்கி வெற்றமாறானாயிற்றே... இவர் மணிமாறன் என்று குறிப்பிட்டிருக்கிறாரே... ஒருவேளை அவரின் இயற்பெயர் அதுவோ என பலரும் குழப்பமாக கமென்ட் செய்திருந்தார்கள். இதனைக்கண்டு உடனே சுதாரித்த கமல், அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு புதிதாக ‘‘நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன்!’’ ட்வீட் செய்தார். அதோடு தவறுதலான பதிவுக்கு... ‘‘வெற்றிமாறன் மணிமாறனானது என் தாந்தோன்றிக்கீboardன் பிசகல்ல my bad.’’ என விளக்கமும் கொடுத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;