படப்பிடிப்பில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா!

படப்பிடிப்பில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 28-Jan-2016 3:46 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக படங்கள் இயக்காமல் இருந்த செல்வராகவன் அடுத்து எஸ்.ஜே.சூர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெஜினா, நந்திதா ஸ்வேதா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவில் பூஜையுடன் துவங்கியது. கௌதம் வசுதேவ் மேனன், ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன், செல்வராகவன் மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலையை விஜய் ஆதிநாதன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

பழைய படங்களின் பெயர்களை மீண்டும் சூட்டி பலர் படங்களை எடுத்து வரும் நிலையில் இப்போது செல்வராகவனும் பழைய ஒரு படத்தின் தலைப்பை சூட்டி படம் இயக்குகிறார். பழம் பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ல் வெளியான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ஆனால் செல்வராகவன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் கதையும், கதைக்களமும் முற்றிலும் புதுசு என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்ஜிகே டீசர்


;