கமல்ஹாசன் பாராட்டிய படம்!

கமல்ஹாசன் பாராட்டிய படம்!

செய்திகள் 28-Jan-2016 2:46 PM IST VRC கருத்துக்கள்

‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த பரத், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பயம் ஒரு பயணம்’. ‘OCTOSPIDER PRODUCTION’ நிறுவனம் சார்பில் எஸ்.துரை, எஸ்.சண்முகம் தயாரித்துள்ள இப்படத்தை சில முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி அனுபவம் பெற்ற மணிஷர்மா இயக்கியுள்ளார். ‘பயம் ஒரு பயணம்’ குறித்து இயக்குனர் மணிஷர்மாவிடம் கேட்டபோது,

‘‘எல்லோருடைய வாழ்க்கையிலும் பயம் என்பது ஒரு சிறு பகுதியாக இருக்கும். ஆனால் அந்த பயமே முழு வாழ்க்கையானால் என்ன ஆவது? என்பது தான் ‘பயம் ஒரு பயணம்’ படம்! இது ஒரு டிராவல் ஹாரர் மூவி! ஒரு வீட்டில் துவங்கி, தொடர்ந்து பயணிக்கும் கதையில் காடும் முக்கிய பங்கு வகிக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் திகில் ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கமல் சாருடன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் நடித்த பரத் கதாநாயகனாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக, பேய் ஆக விசாகா சிங் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, சிங்கம் புலி, ஜான் விஜய், முனிஸ்காந்த் ‘யோகி’ பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பரத்துக்கு கமல் சாருடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அதனால் பரத் கேட்டுகொண்டதை தொடர்ந்து கமல் சார் வந்து படத்தை பார்த்தார். அவர் படத்தை பார்த்து முடித்ததும் ‘‘மாறுபட்ட ஒரு படமாக இருக்கிறது, எனக்கு மிகவும் பிடித்தது, அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்’’ என்று சொன்னார். இந்த படத்தை பொறுத்தவரையில் கமல் சாரின் பாராட்டு, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்’’ என்றார் இயக்குனர் மணி ஷர்மா!
இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஆண்ட்ரு ஏற்றிருக்க, ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்ப்டம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;