இந்திய வல்லரசாக ‘ஆகம்’ படம் தரும் யோசனை!

இந்திய வல்லரசாக ‘ஆகம்’ படம் தரும் யோசனை!

செய்திகள் 28-Jan-2016 12:18 PM IST VRC கருத்துக்கள்

இர்ஃபான், தீக்‌ஷிதா, ஜெயப்பிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரியாஸ்கான், பாலாஜி மோகன், அர்ஜுன், ரவிராஜா, சிவரஞ்சனி முதலானோர் நடித்துள்ள படம் ‘ஆகம்’. ‘ஜோஸ்டார் என்டர்பிரைசஸ்’ நிறுவன்ம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு, ஹேமா ராஜு தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் எழுதி, இயக்கியுள்ளார். ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கிய மோகன் ராஜாவுடன் 6 மாதக் காலம் பணியாற்றிய அனுபவங்களுடன் ‘ஆகம்’ படத்தை இயக்கியிருக்கும் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் படம் குறித்து கூறும்போது,

‘‘இந்தியாவில் படித்துவிட்டு அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து அந்த நாடுகளை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் இந்தியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெளிநாடுகளின் பெரும்பாலான கண்டு பிடிப்புகளில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒரு இந்தியராவது கண்டிப்பாக இருப்பார். ஆனால் அந்த இந்தியர்களுக்கு இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எந்த கவலையும் இருப்பதில்லை. இந்த நிலை ஏன்? இதை மாற்ற முடியாதா? இந்தியாவில் படித்தவர்களுக்கு இங்கேயே உரிய வேலை, சம்பளம் கொடுக்கப்பட்டால் நம் திறமை சாலிகளின் உழைப்பு இங்கேயே பயன்படுத்தப்படும். இதனால் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சி அடைந்து வல்லரசாகும்! இந்த கருத்தை சொல்லும் படம் தான் ‘ஆகம்’. இப்படத்தில் இந்தியா வல்லரசு ஆவதற்கான வழிமுறைகளையும் சொல்கிறோம். ‘ஆகம்’ என்றால் ‘வருகை’ என்று அர்த்தம்! நம் நாட்டின் பெருமையை உயர்த்தும் ஒரு சிறிய முயற்சி தான் இப்படம். அதே நேரம் இப்படம் முழுக்க முழுக்க அறிவுரை சொல்லும் படம் என்று யாரும் நினைக்க வேண்டாம்! இதில் காதல், காமெடி, சென்டிமென்ட், அடிதடி என்று அனைத்து விஷயங்களும் இருக்கிறது’’ என்றார்.

‘ஆகம்’ படத்திற்கு ‘விழுத்திரு’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அப்புச்சி கிராமம்’, ‘ஜில் ஜங் ஜக்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். அனைத்து படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் ‘ஆகம்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;