அனைவரும் பார்க்கலாம் – ‘பெங்களூர் நாட்களு’க்கு கிரீன் சிக்னல்!

அனைவரும் பார்க்கலாம் – ‘பெங்களூர் நாட்களு’க்கு கிரீன் சிக்னல்!

செய்திகள் 28-Jan-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘பி.வி.பி.சினிமா’ நிறுவனம் தயாரித்துள்ள ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி ரிலீசாவிருக்கிறது. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீ-மேக்கான இப்படத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, பார்வதி, லட்சுமி ராய் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில், வெற்றிப் படங்களை இயக்கிய ‘பொம்மிரிலு’ பாஸ்கர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படச்த்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதால் ‘பெங்களூர் நாட்கள்’ படம் நேற்று சென்சாருக்கு சென்றது. .படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த ‘கட்’டும் சொல்லாமல் ‘நீட் ஃபிலிம்’ என்று படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து, படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள்! எதிர்பார்த்துபோலவே ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருப்பதால் ‘பெங்களூர் நாட்கள்’ டீம் பெரும் சந்தோஷமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;