விஜய்ஆன்டனி, மியா ஜார்ஜை இணக்கும் ஜீவாசங்கர்!

விஜய்ஆன்டனி, மியா ஜார்ஜை இணக்கும் ஜீவாசங்கர்!

செய்திகள் 28-Jan-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

ஜீவாசங்கர் இயக்கத்தில் ‘அமரகாவியம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மியா ஜார்ஜ் மீண்டும் ஜீவாசங்கர் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்த முதல் படம் ‘நான்’. இப்படத்தை ஜீவாசங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜீவாசங்கரும், விஜய் ஆண்டனியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். இப்படத்திற்கு ‘எமன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாகிறார் மியா ஜார்ஜ்! ஜீவாசங்கர் இயக்கத்தில் விஜய் ஆன்டனி மற்றும் மியா ஜார்ஜ் நடிக்கும் இரண்டாவது படம் ‘எமன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ‘அமரகாவியம்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் ஆன்டனியுடன் ஜோடி சேரவிருக்கும் மியா ஜார்ஜுக்கு இன்று பிறந்த நாள்! விஜய் ஆன்டனியுடன் ஜோடி சேரவிருக்கும் மியா ஜார்ஜுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;