ஸ்ருதிஹாசன், கருணாகரனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஸ்ருதிஹாசன், கருணாகரனுக்கு குவியும் வாழ்த்துகள்!

செய்திகள் 28-Jan-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

‘போல்டு அன்ட் தி பியூட்டிஃபுல்’ என்ற வாசகத்திற்கு உதாரணமாகத் திகழ்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். மற்றவர்கள் தன்னைப் பற்றிய என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், தன் தந்தையைப் போலவே தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை எந்தவித தயக்கமின்றி செய்துவிடுவார். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களானும் சரி, உடை விஷயங்கள் என்றாலும் சரி... மற்ற நடிகைகளிலிருந்து தனித்துத் தெரிபவர் ஸ்ருதிஹாசன். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட ஸ்ருதி, தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ‘எஸ்3’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ட்விட்டரில் 33 லட்சம் ரசிகர்களை பின்தொடர்பாளர்களாகக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு இன்று பிறந்தநாள். அவரின் லட்சோபலட்சம் ரசிகர்களும் வாழ்த்து மழைகளால் ஸ்ருதியை நனைய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் இன்னொரு பிரபலம் நடிகர் கருணாகரன். 2012ல் வெளிவந்த ‘கலகலப்பு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய கருணாகரன், தனது வெள்ளந்தியான நடிப்பின்மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் கவனம் பெற்றார். அதனைத்தொடர்ந்து வெளியான பீட்சா, சூதுகவ்வும் போன்ற படங்கள் அவருக்கு மேலும் பெயரை வாங்கித் தந்தன. அதோடு ‘யாமிருக்க பயமே’ படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். இதனால் அவரைத்தேடி பல்வேறு வாய்ப்புகள் குவிந்தன. இதுதவிர, ‘லிங்கா’ படம் மூலம் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினியுடனும் நடித்தார் கருணாகரன். இந்த 2016ஆம் ஆண்டில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் காமெடியன் கருணாகரன்தான். தன்னுடைய தனித்துவமான நடிப்பின்மூலம் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்ற கருணாகரனுக்கு இன்று பிறந்தநாள். ட்விட்டரிலும், போன் மூலமாகவும் கருணாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;