மிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இணைத்து இயக்குனராகும் ஒளிப்பதிவாளர் செழியன்!

மிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இணைத்து இயக்குனராகும் ஒளிப்பதிவாளர் செழியன்!

செய்திகள் 27-Jan-2016 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘கல்லூரி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் செழியன். அப்படத்தைத் தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், கடைசியாக வெளிவந்த பாலாவின் இரண்டு படங்களான பரதேசி, தாரை தப்பட்டை ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், ஜீவா, கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரன் உட்பட தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர்கள் வரிசையில் செழியனும் இடம்பெறவிருக்கிறார்.

ஆம்... விரைவில் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷை இணைந்து நடிக்க வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறாராம் ஒளிப்பதிவாளர் செழியன். இப்படத்தில் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ் இருவருமே போலீஸாக நடிக்கவிருக்கிறார்களாம். அனேகமாக இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மார்ச் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;