கமலின் அதிரடி என்ட்ரி... உற்சாகத்தில் பிரபலங்கள்!

கமலின் அதிரடி என்ட்ரி... உற்சாகத்தில் பிரபலங்கள்!

செய்திகள் 27-Jan-2016 9:54 AM IST Chandru கருத்துக்கள்

புதிய புதிய டெக்னாலஜி விஷயங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் அனைவருக்குமே முன்னோடி ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்தான். ஆனால் சமூக வலைதளங்களின் வளர்ச்சி விஸ்வரூபத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதிலிருந்து சற்று விலகியே இருந்தார் கமல். ஃபேஸ்புக்கில் மட்டும் கமலுக்கான அதிகாரபூர்வ பக்கம் கடந்த வருடம் தொடரப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுமுதல் ட்விட்டரிலும் அதிரடியாக களமிறங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

2014ல் ‘கோச்சடையான்’ பட ரிலீஸ் சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இன்னொரு உச்சநட்சத்திரமான கமல்ஹாசனும் ட்விட்டரில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகமே இதனை கொண்டாடி வருகின்றது. கௌதமி, ஸ்ருதிஹாசன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோரை மட்டுமே கமல் ட்விட்டரில் தற்போது ஃபாலோ செய்துள்ளார். தன் அப்பா ட்விட்டரில் இணைந்ததற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் மகள் ஸ்ருதிஹாசன். இன்னும் பல பிரபலங்கள் உலகநாயகனை வாழ்த்தி ட்விட்டர் உலகத்திற்கு வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

கமலின் ட்விட்டர் ஐடி : twitter.com/ikamalhaasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;