‘பாகுபலி’க்கு 6 விருதுகள்!

‘பாகுபலி’க்கு 6 விருதுகள்!

செய்திகள் 25-Jan-2016 2:37 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில ஆண்டுகளாக சிறந்த சினிமா கலைஞர்களுக்கு International Indian Film Academy (IIFA) விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2015-ன் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ராஜமௌலியின் ‘பகுபலி’ திரைப்படத்திற்கு 6 விருதுகள் கிடைத்தது. தமிழின் சிறந்த படம், சிறந்த இயக்குனர் (ராஜமௌலி), சிறந்த குணச்சித்திர நடிகர் (சத்யராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகை (ரம்யாகிருஷ்ணன்), சிறந்த பின்னணிப் பாடகர் (ஹரிச்சரண்), சிறந்த பின்னணிப் பாடகி (கீதா) என ‘பாகுபலி’ 6 விருதுகளை அள்ளியது! தமிழின் சிறந்த நடிகருக்கான விருது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த ‘ஜெயம்’ ரவிக்கு வழங்கப்பட்டது. ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கிய ‘மாயா’ படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இசை அமைப்பாளராக அனிருத் (மாரி), சிறந்த நகைச்சுவை நடிகையாக கோவை சரளா (காஞ்சனா-2), சிறந்த வில்லன் நடிகராக அர்விந்த் சாமி (தனி ஒருவன்), சிறந்த பாடலாசிரியராக தனுஷ் (மாரி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். நேற்று நடந்த இவ்விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், மாதவன், நடிகைகள் தமன்னா, மீனா, ஸ்ரேயா, அபிராமி, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;