நடிகராக, இயக்குனராக களமிறங்கும் டாக்டர்!

நடிகராக, இயக்குனராக களமிறங்கும்  டாக்டர்!

செய்திகள் 25-Jan-2016 1:30 PM IST Top 10 கருத்துக்கள்

‘சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் டாக்டர் பரத் விஜ்ய கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரிக்கும் படம் ‘ஆறாம் அறிவு’. ஷியாம் எல்.ராஜ் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படம் குறித்து டாக்டர் பரத் விஜய் கூறும்போது,

‘‘என்னோட தொழில் மருத்துவம் மற்றும் மாடலிங்! சின்ன வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல் கொண்டவன் நான்! அதன் விளைவாகவே இப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கி வருகிறேன். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்களின் உதவியுடன் வாழ்க்கையில் ஒன்று சேரும் ஒரு தம்பதியர் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் பல விசித்திரமான சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். வரிசையாக பேய் படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த சீசனில் இப்படம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். ஒரு பெண்ணை ஒரு சக்தி எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது, அதனல் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை படு த்ரில்லிங்காக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளோம். சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படமாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;