புதுமுகங்கள் நடிக்கும் ‘தாமி’

புதுமுகங்கள் நடிக்கும் ‘தாமி’

செய்திகள் 25-Jan-2016 11:29 AM IST VRC கருத்துக்கள்

இன்றைய சூழ்நிலையில் மொபைல் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை செல்ஃபி என்பது! ஆங்கில வார்த்தையான ‘செல்ஃபி’யின் தமிழாக்கம் ‘தாமி’ என்று குறப்படுகிறது. சிந்தித்து புதிய பட பெயர்களை வைக்க முடியாமல் பழைய படங்களின் பெயர்களை மீண்டும் சூட்டப்பட்டு திரைப்படங்களை உருவாக்கி வரும் இந்த சீசனில் ‘தாமி ’என்று ஒரு படத்திற்கு வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிரவீன்குமார் இயக்கும் இப்படத்தில் புதுமுகம் அர்ஜுன் சோமயாஜுலு கதையின் நாயகனாக நடிக்க, சாந்தினி நாயகியாக நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் புதுமுகம் அஞ்சு குரியனும் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் அருணாசலம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வஞ்சகர் உலகம் - ட்ரைலர்


;