இளையராஜா படத்திற்கு கமல் பாராட்டு!

இளையராஜா படத்திற்கு கமல் பாராட்டு!

செய்திகள் 25-Jan-2016 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட்’ தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கி வரும் படம் ‘ஓய்’. புதுமுகங்கள் கீதன் பிரிட்டோ, ஈஷா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் இசையை கமல்ஹாசன் வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்டார். அதன் பிறகு கமல்ஹாசன் பேசும்போது,
‘‘தன் வசீகர இசையால் பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. ‘16 வயதினிலே’ உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று! இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ‘ஓய்’ படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்’’ என்று பாராட்டிப் பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;