நடிகை கல்பனா திடீர் மரணம்!

நடிகை கல்பனா திடீர் மரணம்!

செய்திகள் 25-Jan-2016 10:16 AM IST VRC கருத்துக்கள்

சின்ன வீடு, சதிலீலாவதி, பம்மல் கே.சம்மந்தம், காக்கிச்சட்டை உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்கள், தெலுங்கு படங்கள் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் கல்பனா. நடிகைகள் ஊர்வசி, சிவரஞ்சனி ஆகியோரின் சகோதரியான இவர் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். திடீர் என்று அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை ஹைதராபத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்றி அவர் திடீரென்று காலமானார். சின்ன வயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க துவங்கி, பிறகு சினிமாவுக்கு வந்தவர் கல்பனா! நல்ல நகைச்சுவை உணர்வுள்ள கல்பனா பெரும்பாலும் காமெடி பாத்திரங்களையே ஏற்று நடித்து வந்தார். கலை குடும்பத்தை சேர்ந்த கல்பனாவின் திடீர் மறைவு தென்னிந்திய சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழித்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;