விஜய்சேதுபதியுடன் ‘றெக்க’ கட்டி பறக்கவிருக்கும் லக்ஷ்மிமேனன்!

விஜய்சேதுபதியுடன் ‘றெக்க’ கட்டி பறக்கவிருக்கும் லக்ஷ்மிமேனன்!

செய்திகள் 25-Jan-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

இடம் பொருள் ஏவல், மெல்லிசை, காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி என வரிசையாக விஜய்சேதுபதியின் 5 படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. இதைத் தவிர்த்து தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 3 படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தர்மதுரையில் தமன்னாவை ஜோடியாக்கிய விஜய்சேதுபதி, ‘றெக்க’ படத்தில் லக்ஷ்மி மேனனுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார். விஜய்சேதுபதியின் ‘காதலும் கடந்துகும்’, லக்ஷ்மிமேனனின் ‘மிருதன்’ படங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய்யின் ‘வா’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இந்த ‘றெக்க’ படத்தையும் இயக்குகிறார். விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படப்புகழ் காமன் மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்க, எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எடிட்டிங்கிற்கு பிரவீன் கே.எல், கலை இயக்கத்துக்கு மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சிக்கு ராஜசேகர் ஆகியோர் இப்படத்தில் கைகோர்த்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;