34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

செய்திகள் 23-Jan-2016 1:58 PM IST VRC கருத்துக்கள்

34 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘மணல் கயிறு’. விசு இயக்கிய இப்படத்தில் திருமண தரகராகவும் நடித்திருந்தார் விசு! 8 கண்டிஷன் போட்டு திருமணம் செய்யும் கேரக்டரில் கதையின் நாயகனாக எஸ்.வி.சேகரும், முக்கிய கேரக்டரில் குரியகோஸும் நடித்திருந்தனர். இவர்கள் மூவரும் மீண்டும் இணைந்து நடிக்க ‘மணல் கயிறு-2’ என்ற பெயரில் படம் உருவாகிறது. இதில் எஸ்.வி.சேகரின் மகனாக அஸ்வின் சேகரும், குரியகோஸின் மகளாக பூர்ணாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சாமிநாதன், சாம்ஸ், ஜெகன் ஆகியோரும் நடிக்கின்றனர். விசுவின் மூலகதைக்கு எஸ்.வி.சேகர் திரைக்கதை அமைக்க, ‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன் குமார் வசனம் எழுதி இயக்குகிறார். தரண்குமார் இசை அமைக்கிறார். இராமநாராயணின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ பேனரில் என்.ராமசாமி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல் காட்சிகள் பாங்காங்கில் படமாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மணல்கயிறு 2 - டிரைலர்


;