நயன்தாரா, தமன்னாவை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா!

நயன்தாரா, தமன்னாவை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 23-Jan-2016 12:48 PM IST VRC கருத்துக்கள்

‘நானும் ரௌடி தான்’ படம் வரை இரவல் குரலில் பேசி நடித்து வந்த நயன்தாரா ‘நானும் ரௌடி’ படத்தில் முதன் முதலாக சொந்த குரலில் பேசி நடித்தார். இப்படத்தில் நயன் தாராவின் கேரக்டருக்கு அவரது இனிய குரலும் வலு சேர்த்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. இப்போது நயன்தாராவை தொடர்ந்து இன்னும் பல ஹீரோயின்கள் சொந்த குரலில் பேசி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது படப்பிடிப்பில் இருந்து வரும் சீனுராமசாமியின் ‘தர்மதுரை’யில் கதாயாநாயகியாக நடிக்கும் தமன்னா சொந்த குரலில் பேசி நடிக்கிறார். அதைப் போல விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா சொந்த குரலில் பேசியுள்ளார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ஸ்ரீதிவ்யா இதுவரை ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றாலும் அதில் எல்லாம் அவருக்கு இரவல் குரல் தான். பொதுவாக தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் சொந்த குரலில் பேசி நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட நடிகைகள் தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்க காட்டும் ஆர்வத்தை பாராட்டலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;