குடியரசுதினத்தன்று ‘முன்னாள் காதலி’யை அறிமுகப்படுத்தும் ஜெயம் ரவி!

குடியரசுதினத்தன்று ‘முன்னாள் காதலி’யை அறிமுகப்படுத்தும் ஜெயம் ரவி!

செய்திகள் 23-Jan-2016 12:15 PM IST Chandru கருத்துக்கள்

’தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்’ என்ற பெருமையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ஜெயம் ரவியின் ‘மிருதன்’. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர் ராஜன். லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகன் ஜெயம் ரவி டிராபிக் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தொடர்ந்து, ‘மிருதன்’ மூலம் ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணியமைத்திருக்கிறார் ‘டண்டணக்கா...’ புகழ் டி.இமான். இவரின் இசையில் உருவான ‘மிருதன்’ பாடல்களின் ஆடியோ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிடவிருக்கும் ஜெயம் ரவி அன்ட் கோ அதற்கு முன்னதாக, குடியரசு தினத்தை முன்னிட்டு ‘முன்னாள் காதலி...’ பாடலின் வீடியோவை யு டியூப்பில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். கார்க்கி எழுதியிருக்கும் இப்பாடலை விஷால் தட்லானி, ஷரண்யா கோபிநாத் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;