சிம்பு ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ விருந்து!

சிம்பு ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ விருந்து!

செய்திகள் 22-Jan-2016 10:21 AM IST Chandru கருத்துக்கள்

நயன்தாரா கொடுத்த கால்ஷீட்டை சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாததால் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஒன்றிரண்டு காட்சிகளும், பாடல் ஒன்றும் இன்னும் படமாக்கப்படாமலேயே இருக்கிறது. இதனால் ‘படம் எப்போது வெளியாகும்?’ என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள். இந்நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயங்கள் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘இது நம்ம ஆளு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கைப்பற்றியிருப்பதால், படத்தை எப்படியும் ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதோடு இப்படத்தின் சேனல் உரிமையை கைப்பற்றியிருக்கிறது சன் டிவி நிறுவனம்.

சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ உரிமையை டி&சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. பாடல்களை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். துவண்டு கிடந்த சிம்பு ரசிகர்களுக்கு, சர்ப்ரைஸ் விருந்து கிடைக்கவிருக்கிறது சிம்பு பிறந்தநாளன்று!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;