50 வினாடிகள் அசத்தவிருக்கும் ‘தெறி’ டீஸர்!

50 வினாடிகள் அசத்தவிருக்கும் ‘தெறி’ டீஸர்!

செய்திகள் 22-Jan-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

‘இளையதளபதி’யின் இளைய வாரிசை வெள்ளித்திரையில் காணவிருக்கும் சந்தோஷத்திலிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, ‘தெறி’ பற்றி வெளிவரும் ஒவ்வொரு விஷயமும் கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது ‘தெறி’யின் டீஸர் குறித்த தகவல் ஒன்றும் கசிந்திருக்கிறது. ஆக்ஷன் அனல் பறக்கும் டீஸர் ஒன்றை உருவாக்கும் பணியில் அட்லி குழுவினர் படு மும்முரமாக இருக்கிறார்களாம். மொத்தம் 50 வினாடிகள் ஓடவிருக்கும் இந்த டீஸரில் விஜய்யின் வித்தியாசமான தோற்றங்களையும் கண்டுகளிக்கலாம் என்கிறார்கள். இந்த டீஸரை பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகிவரும் பாடல்களை மார்ச் மாதம் வெளியிடலாம் எனத் தெரிகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளித்திரைகளில் ‘தெறி’யின் முழுநீள ஆக்ஷன் விருந்தை கண்டுகளிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;