மா.கா.பா படத்தில் அஜித், விஜய்சேதுபதி!

மா.கா.பா படத்தில் அஜித், விஜய்சேதுபதி!

செய்திகள் 22-Jan-2016 9:46 AM IST VRC கருத்துக்கள்

மா.கா.பா.ஆனந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அட்டி’.அறிமுக இயக்குனர் விஜய்பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக புதுமுகம் அஷ்மிதா நடித்துள்ளார். சுந்தர்.சி.பாபு இசை அமைத்துள்ளார். ‘E5 என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ மற்றும் ‘இமேஜினரி மிஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படம் குறித்து இயக்குனர் விஜய்பாஸ்கர் பேசும்போது,

‘‘இந்த படத்திற்கு ‘அட்டி’ என்று பெயர் வைத்ததும் நிறைய பேர் கேட்டர்கள் ‘அட்டி’ என்றால் என்ன என்று? இளைஞர்கள் அரட்டை அடிப்பதற்கு கூடும் இடத்திற்கு ‘அட்டி’ என்று சொல்வார்கள். இது ஒரு பக்கா காமெடி, கமர்ஷியல் படம். இதில் மா.கா.பா.ஆனந்த் தல(அஜித்) ரசிகராக, கானா பாடகராக நடித்துள்ளார். ‘அட்டி’ கதையை உருவாக்கியதும் இந்த கேரக்டருக்கு மா.கா.பா.ஆனந்த் தான் ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்பதை எல்லோரும் முடிவு செய்தோம். அவரும் படத்தில் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். ‘அட்டி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரலில் பதிவு செய்துள்ளோம்.இது பற்றி அவரிடம் சொன்னபோது உடனே ஒப்புக்கொண்டு பேசியும் கொடுத்து விட்டார். இந்த வகையில் இப்படத்தில் விஜய்சேதுபதியும் இருக்கிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை’’ என்றார்.
மா.கா.பா.ஆனந்த் பேசும்போது, ‘‘என்னிடம மைக் கொடுத்து பேச சொன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவேன். ஆனால் இப்படத்தில் என்னை பாட வைத்து நான்கு நடனம் எல்லாம் ஆட வைத்திருக்கிறார்கள். இதில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குனர் விஜய்பாஸ்கர் தான். அதைப்போல நன்றாக நடனம் ஆடியிருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் டான்ஸ் மாஸ்டர் சுரேஷ் தான். ஒரு ‘ஆர்.ஜே.’வாக இருந்து, பிறகு ஒரு ‘வி.ஜே.’வாக மாறி இப்போது நடிகராக உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் எல்லாம் எனக்கு தந்த ஆதரவு தான். ஒரு நடிகராகவும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.

இந்த படத்தை இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் சுந்தர்.சி.பாபுவின் ‘பரிநிதா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் விரைவில் ‘அட்டி’யை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்யவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;