அனிருத்தின் ‘காதலர் தின’ ரிலீஸ்!

அனிருத்தின் ‘காதலர் தின’ ரிலீஸ்!

செய்திகள் 22-Jan-2016 9:55 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில வாரங்களாக இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக கனடா சென்றிருந்த அனிருத், தற்போது சென்னைக்குத் திரும்பிவிட்டார். ‘பீப் பாடல்’ சர்ச்சையிலிருந்து ஓரளவுக்கு அமைதிக்குத் திரும்பியிருக்கும் அனிருத் முதல் கட்டமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ‘அவளுக்கென்ன...’ என்ற சிங்கிள் டிராக் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார். இப்பாடலுக்கு வரிகளை உருவாக்கித் தந்திருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு அனிருத்தும், விக்னேஷ் சிவனும் மீண்டும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியிருப்பதால், இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல் ‘எனக்கென யாரும் இல்லையே...’ என்ற ஆல்பம் அனிருத் வெளியிட்டிருந்தார். அப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;