மகிழ்ச்சியில் ‘அரண்மனை-2’ படக்குழுவினர்!

மகிழ்ச்சியில் ‘அரண்மனை-2’ படக்குழுவினர்!

செய்திகள் 21-Jan-2016 12:12 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 2’ வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்த இப்படம் நேற்று தணிக்கைக் குழுவினரின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘அரண்மனை-2’ அனைவரும் பார்க்க கூடிய படம் என்று ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படக்குழுவினர் எதிர்பார்த்தது போலவே ‘அரண்மனை-2’விற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். வரிசையாக வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் ‘அரண்மனை-2’ படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;