இளையராஜாவுக்கு கேரள அரசு விருது!

இளையராஜாவுக்கு கேரள அரசு விருது!

செய்திகள் 21-Jan-2016 10:29 AM IST VRC கருத்துக்கள்

கேரளா சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் ‘நிசாகந்தி நடன, இசை விழா’ நடத்தப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக நடனம் மற்றும் இசை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிசாகந்தி விருதுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா தேர்வாகியிருந்தார். அவருக்கு நேற்று நடந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி விருது வழங்கினார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் உம்மன் சாண்டி பேசும்போது,

‘‘இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கியதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கேச் சென்று விட்டது! கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990 ஆண்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்’’ என்றார் முதல்வர் உம்மன் சாண்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;