சிவகார்த்திகேயனை பின் தொடரும் சந்தானம்!

சிவகார்த்திகேயனை பின் தொடரும் சந்தானம்!

செய்திகள் 21-Jan-2016 10:09 AM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தில் கதையின் நாயகனாக சந்தானம் நடக்கிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இனிமே இப்படித்தான்’, ‘வாலிபராஜா’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கான கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பிரமோத் கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (ஜனவரி-21) சந்தானம் பிறந்த நாள்! இதனையொட்டி ‘சர்வர் சுந்தர’த்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு ஆரம்பமானது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘எதிர்நீச்சல்’. இந்த பட டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ ஹிட்டானதை தொடர்ந்து இப்போது அதே பாணியில் சந்தானமும் நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ டைட்டிலில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படம் வெற்றிபெற்றதை போன்று சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படமும் மாபெரும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;