‘வேட்டைக்காரனை’த் தொடர்ந்து ‘தெறி’யில் அறிமுகமாகும் அடுத்த வாரிசு!

‘வேட்டைக்காரனை’த் தொடர்ந்து ‘தெறி’யில் அறிமுகமாகும் அடுத்த வாரிசு!

செய்திகள் 21-Jan-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

4 விதமான தோற்றங்களில் விஜய் நடிக்கிறார், ரோப் சண்டைக்காட்சி ஒன்றிற்காக தொடர்ந்து 40 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது, தண்ணீருக்கடியில் படப்பிடிப்பு, சண்டைக்காட்சிகாக ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள் களமிறங்கப்பட்டிருப்பது என ‘தெறி’ படத்தைப் பற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும் ‘இளையதளபதி’ ரசிகர்களுக்கு கரும்புச்சுவையாய் தித்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை கூடுதலாக்கும் வகையில் தற்போது இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. அது... இப்படத்தில் விஜய்யின் மகள் திவ்யாவும் நடிக்கிறார், அதுவும் அவரின் மகளாகவே என்பதுதான். ஏற்கெனவே இப்படத்தில் மீனாவின் மகளும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது விஜய்யின் இரண்டு மகள்களில் ஒருவராக அவரது சொந்த மகள் திவ்யாவையே நடிக்க வைத்திருக்கிறாராம் அட்லி.

விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட...’ என்ற பாடலில் அவருடன் இணைந்து நடனமாடியதை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது விஜய்யின் மகளையும் பெரிய திரையில் கண்டு மகழும் வாயப்புக்கிடைத்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;