ரஜினி பஞ்ச் டயலாக்கை தலைப்பாக்கிய ஜி.வி.!

ரஜினி பஞ்ச் டயலாக்கை தலைப்பாக்கிய ஜி.வி.!

செய்திகள் 20-Jan-2016 4:55 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் ‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தற்போது ரஜினி நடிப்பில் ‘2.0’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதோடு ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பை நடத்தி வந்த இப்படத்திற்கு இப்போது ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த ஆனந்தி தான் இப்படத்திலும் அவருக்கு ஜோடி! இவர்களுடன் ‘பருத்தி வீரன் சரவணன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யோகி’ பாபு, நிரோஷா, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் டைட்டில் அறிவுப்புடனான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.யே இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பினை கிருஷ்ணன் வசந்த் கவனிக்கிறார். படத்தொகுப்பை ஆன்டனி ரூபன் கவனிக்கிறார். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இப்படம் தெலுங்கில் ‘நாகுஇன்கோ பேருண்டி’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;