‘சேதுபதி’யை கண்டு பயந்த விஜய்சேதுபதி!

‘சேதுபதி’யை கண்டு பயந்த விஜய்சேதுபதி!

செய்திகள் 20-Jan-2016 4:18 PM IST VRC கருத்துக்கள்

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் அருண்குமாரும், நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘சேதுபதி’. ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘தெகிடி’ படத்திற்கு இசை அமைத்த நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். ‘பீட்சா’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், ரம்யா நம்பீசனும் ஜோடியாக நடித்துள்ள ‘சேதுபதி’யின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.அப்போது விஜய்சேதுபதி பேசும்போது,

‘‘அருண் குமார் இந்த போலீஸ் கதையை சொல்லும்போது இந்த கதையும், கேரக்டரும் எனக்கு ‘செட்’டாகுமானு யோசித்தேன். பிறகு ஒருவித தயக்கத்தோட தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்ற டிஸ்கஷன் நடந்தபோது அருண்குமார் ‘சேதுபதி’ங்கற தலைப்பு ரொம்ப பொருத்தமாக இருக்கும், அதை வைக்கலாம் என்று சொன்னார். அவர் ‘சேதுபதி’ என்ற டைட்டிலை சொன்னதும் எனக்கு ஒருவித பயம் வந்துருச்சு. ஏனா நாம ரொம்ப ஓவரா போறோமோன்னு! படம் ஏதாவது ஆச்சுனா அவ்வளவு தான்! மொத்தமும் எனக்கு தான் கிடைக்கும்! ‘சேதுபதி’ங்கற தலைப்பு வேண்டாம்னு சொன்னேன். ஆனால் இயக்குனர் அருண்குமாரும், ஒளிப்பதிவாளர் தினேஷும் அந்த தலைப்பில் உறுதியாக, நம்பிக்கையோட இருந்தாங்க! அதனால கடைசியில நானும் ஒத்துக்கிட்டேன்.

‘பீட்சா’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் நானும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்துள்ளோம். ரம்யா நல்ல நடிகை! அவங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்களை ‘பீட்சா’ படத்திற்கு பிறகு இப்போதான் பார்க்கிறேன். ‘ஆனா எங்களுக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க, என்று ‘சேதுபதி’யில் நடித்துள்ள இரண்டு குழந்தைகளை அணைத்தவாறு ‘யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ‘சேதுபதி’யில் நானும், ரம்யாவும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா நடிச்சிருக்கோம்’’ என்று தனது பேச்சை முடித்துக் கொள்ள அரங்கத்தில் பெரும் கரகோஷம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;