15 வருங்களுக்கு பிறகு விஜய்!

15 வருங்களுக்கு பிறகு விஜய்!

செய்திகள் 20-Jan-2016 4:18 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் விதவிதமான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளன! இந்நிலையில் விஜய் Short Hair Cut- கெட்-அப்பில் இருப்பது மாதிரியான ஒரு புகைப்படமும் இன்று சோஷியல் மீடியாக்களில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘தெறி’ படத்தில் விஜய் மூன்று கெட்-அப்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க விஜய்யின் இந்த புதிய கெட்-அப் அவரது ரசிகர்களிடையே பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் படி விஜய் இந்த கெட்-ஆப்பில் ‘தெறி’ படத்தில் நடித்துள்ளாராம். இது போன்றதொரு கெட்-அப்பில் விஜய் ஏற்கெனவே ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் நடித்திருப்பார். இப்படம் 2001-ல் வெளியானது. ஃப்ரெண்ட்ஸ் ‘வெளியாகி’ 15 ஆண்டுகள் ஆன நிலையில் விஜய் மீண்டும் அதே போன்றதொரு கெட்-அப்பில் ‘தெறி’ படத்தில் தோன்றவிருக்கிறார். ‘தெறி’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக இயக்குனர் அட்லி நேற்று தெரிவித்திருந்தார். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் தெறி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;