அஜித் படத்தை தயாரிக்கிறதா சத்யஜோதி ஃபிலிம்ஸ்?

அஜித் படத்தை தயாரிக்கிறதா சத்யஜோதி ஃபிலிம்ஸ்?

செய்திகள் 20-Jan-2016 10:37 AM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக, அஜித்தும் இயக்குனர் சிவாவும் இணைகிறார்கள். தற்போது காலில் செய்யப்பட்டுள்ள ஆபரேஷனுக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் அஜித், ஓய்வு முடிந்து திரும்பியதும் ஒரே நேரத்தில் இரண்டு புராஜெக்ட்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதில் ஒன்று சிவா இயக்கம், இன்னொன்று ‘பில்லா’, ‘ஆரம்பம்’ புகழ் விஷ்ணுவர்தன் இயக்கம். இதில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் மோகன் லாலும் முக்கிய வேடமொன்றில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளிவராத நிலையில், அஜித் நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அஜித் நடிக்கவிருக்கும் 2 படங்களில் எந்த படத்திற்கான பேச்சுவார்த்தை இது என்பது குறித்து தெரியவில்லை. தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மிரட்டு’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ். இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமொன்றை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்குப் பிறகே அஜித் நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;