'ரயிலு'க்கு குட்பை, உறுதியானது ‘மிரட்டு’ டைட்டில்!

'ரயிலு'க்கு குட்பை, உறுதியானது ‘மிரட்டு’ டைட்டில்!

செய்திகள் 20-Jan-2016 9:48 AM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு ‘ரயில்’ என்ற டைட்டில் வைக்கப்படலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், ‘ரயில்’ டைட்டிலுக்கு வரிச்சலுகை கிடைக்காது என்பதால், ‘மிரட்டு’ என்ற டைட்டிலை வைக்க தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இப்போது, ரயிலுக்கு குட்பை சொல்லிவிட்டு ‘மிரட்டு’ என்ற டைட்டிலை உறுதி செய்திருப்பதாக தயாரிப்புத்தரப்புக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ‘மிரட்டு’ டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியாகும் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது.

டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘மிரட்டு’ படத்தின் பாடல்கள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;