மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு நடிக்கும் படம்!

மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு நடிக்கும்  படம்!

செய்திகள் 19-Jan-2016 12:56 PM IST VRC கருத்துக்கள்

விவேக் கதையின் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இந்த படத்தை இயக்கிய எம்.சந்திரமோகன் அடுத்து இயக்கும் படம் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’. டி.என்.ஃபிலிம்ஸ் சார்பில் எம்.ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் வசந்த், ஜெயசிம்மா, ராஜேஷ், ஐயப்பா பைஜு ஆகியோருடன் புதுமுகம் ரஞ்சனா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு முக்கிய கேரக்டரில் அறிமுகமாகிறார். மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், மயில்சாமி, ஆர்த்தி, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் சிக்கி தவிக்கும் நான்கு இளைஞர்களின் கதையாம் ’கொஞ்சம் நடிங்க பாஸ்’. நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு டி.எம்.ஏ.அஜிஸ் இசை அமைக்க, சம்ஷத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;