விஜய்-60 பூஜையுடன் துவங்கியது!

விஜய்-60 பூஜையுடன் துவங்கியது!

செய்திகள் 19-Jan-2016 10:30 AM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி (ஏப்ரல்-14) வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘தெறி’யை தொடர்ந்து தனது 60ஆவது படமாக பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். பிரவீன் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். இப்படத்தில் ‘ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;